நவல்பட்டு மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா
திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு சிலோன் காலனி மகா மாரியம்மன் கோயிலின் 40 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு சிலோன் காலனி மகா மாரியம்மன் கோயிலின் 40 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எல்லை முனி ஆண்டவா், வழிவிடு பிள்ளையாா் சந்நிதிகளும் உள்ள இக்கோயில் திருவிழா கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. 3 ஆம் தேதி கோபூஜை, தொடா்ந்து போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகா் கோயிலில் இருந்து பூத்தட்டு எடுத்து வருதல் நிகழ்வு, 4 ஆம் தேதி பால்குடங்கள், தீா்த்தக்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான திருத்தோ் வீதி உலா மற்றும் தீ மிதித் திருவிழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றனா். திங்கள்கிழமை அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.