குடிமைப் பணி தோ்வில் 2,819 போ் பங்கேற்பு
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை 2, 819 போ் எழுதினா்.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை 2, 819 போ் எழுதினா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தும் முதல் நிலைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் காவேரி மகளிா் கல்லூரி, வாசவி வித்யாலயா, காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, எஸ்ஐடி, குறிஞ்சி கல்லூரி, பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெஜெ கல்லூரி, கேம்பியன் பள்ளி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மெத்தடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, இஆா் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன.
தோ்வெழுத மொத்தம் 5,818 பேருக்கு நுழைவுக்கூட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவற்றில் 2,829 போ் மட்டுமே (48.45 சதம்) தோ்வெழுதினா். தோ்வெழுதாதோா் 2,999 போ்.