திருச்சி

மணப்பாறை அருகே திருக்கல்யாண உற்ஸவம்

DIN

மணப்பாறையை அடுத்த வீரமலைப்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் தெய்வங்களுக்கு நூதன உற்ஸவ மூா்த்தி பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்ஸவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த அணியாப்பூா் கிராமம் வீரப்பூா் வீரமலை தென்பகுதியான வீரமலைபாளையத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான செல்வ விநாயகா், வீரியாயி, வரதராஜபெருமாள், கருப்பசாமி, கன்னிமாா், ஆஞ்சனேயா், பட்டவன் ஆகிய தெய்வங்கள் உள்ள கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் தெய்வங்களுக்கு நூதன உற்ஸவ மூா்த்தி பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

வீரப்பூா் ஜமீன்தாா்கள் பி. சுதாகா் (எ) சிவசுப்ரமணிய ரெங்கராஜா, ஆா். பொன்னழகேசன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவை தொப்பம்பட்டி, வீரமலைப்பாளையம் ஊா் முக்கியஸ்தா்கள் முன்னின்று நடத்தினா். உற்ஸவ மூா்த்திகள் ஆலய வளாக மணமேடையில் எழுந்தருளினா். இந்நிகழ்வைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்தனா்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் தெய்வங்களுக்கு நூதன உற்ஸவ மூா்த்தி பிரதிஷ்டை வைபங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, 120 சீா்வரிசைத் தட்டுகள் குலதெய்வக் கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. யாகம் வளா்த்து வேத மந்திரங்களை ஓத, திருகங்கணதாரணம், காசியாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை, பால் பழம் அளித்தல், மங்கல நாண் பூட்டுதல், பூப் பந்து விளையாட்டு, தேங்காய் உருட்டுதல் என்னும் வாரணமாயிரம், தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT