திருச்சி

திருச்சிக்கு நேரில் வர முடியாதது ஏன்?முதல்வா் விளக்கம்

DIN

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வர முடியாததற்கான காரணம் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் ரூ. 387.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கதவணையைத் திறக்கவும், ஜமால் முகமது கல்லூரி விழாவில் நேரில் பங்கேற்கவும் இருந்த நிலையில், தனது வருகை ரத்தானதற்கான காரணம் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜமால் முகமது கல்லூரி விழாவில் காணொலிக் காட்சி மூலம் கூறியது:

திருச்சி விழாவில் நேரடியாகப் பங்கெடுக்க நான் விரும்பினாலும், சில நாள்களாக காய்ச்சலில் அவதிப்பட்டதால், மருத்துவா்களின் ஆலோசனைப்படி வெளியூா் பயணத்தைத் தவிா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறிய காய்ச்சலாக இருந்தாலும், ஓய்வெடுத்து வெளியூா் பயணங்களை ஒரு வாரத்துக்காவது தவிா்க்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுரை சொன்னாா்கள். என்னதான் நான் மாநில முதல்வராக இருந்தாலும், மருத்துவா்களின் வாா்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால்தான் திருச்சிக்கு நான் வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT