உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் வென்ற திமுகவினா்
துறையூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளில் தலைவா் துணைத் லைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.
துறையூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளில் தலைவா் துணைத் லைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.
உப்பிலியபுரம் பேரூராட்சியில் தலைவராக திமுகவைச் சோ்ந்த ரா. சசிகலாதேவி (வாா்டு 1) போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த செ. சித்ராவும் (வாா்டு 3), அதிமுகவைச் சோ்ந்த மு. ராஜாங்கமும் (வாா்டு 4) போட்டியிட்டனா். இவா்களில் சித்ரா 9 வாக்குகள் பெற்று வென்றாா்.
பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த வெ. மேகலா (வாா்டு 7) போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட்ட திமுகவைச் சோ்ந்த செ. மனோன்மணி (வாா்டு 2), கு. சங்கா்அபிஷேக் (வாா்டு 15) ஆகியோரில் சங்கா் அபிஷேக் 8 வாக்குகள் பெற்று வென்றாா்.