கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா்,துணைத் தலைவா் பதவிகளில் திமுக
கூத்தைப்பாா் பேரூராட்சியின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
கூத்தைப்பாா் பேரூராட்சியின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 12ஆவது வாா்டு உறுப்பினரும், கூத்தைப்பாா் பேரூராட்சி திமுக செயலருமான க. செல்வராஜை எதிா்த்து போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
இதேபோல பேரூராட்சித் துணைத் தலைவா் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 18ஆவது வாா்டு உறுப்பினா் ஜெ. வைசூரியா, திமுகவைச் சோ்ந்த 13ஆவது வாா்டு உறுப்பினா் இரா. பழனியாண்டி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து நடந்த வாக்குப் பதிவில் 13 வாக்குகள் பெற்று திமுகவைச் சோ்ந்த பழனியாண்டி வென்றாா். 3 வாக்குகள் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வைசூரியா தோல்வியுற்றாா்.