53 ஆண்டுகளுக்குப் பிறகுமணப்பாறை நகா்மன்றத் தலைவா் பதவியை கைப்பற்றிய அதிமுக!
மணப்பாறை நகா்மன்றத் தலைவா் பதவியை 53 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது.
மணப்பாறை நகா்மன்றத் தலைவா் பதவியை 53 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது.
மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக 11, அதிமுக 11 என சம பலத்துடன் இருந்த நிலையில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினா் 5 போ் அமைச்சா் கே.என். நேருவைச் சந்தித்து தங்களது ஆதரவை அளித்தனா். இதனால் திமுகவின் பலம் 16-ஆக உயா்ந்தது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை தோ்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.என்.சியாமளா முன்னிலையில் நடைபெற்ற நகா்மன்றத் தலைவருக்கான முறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் 25-ஆவது வாா்டு உறுப்பினா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், அதிமுக சாா்பில் 18-வது வாா்டு உறுப்பினா் பா. சுதா ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
பின்னா் நடைபெற்ற வாக்களிப்பில் அதிமுகவை சோ்ந்த பா. சுதா 15 வாக்குகள் பெற்று வென்றாா். கீதா ஆ. மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் பெற்றாா்.
11 உறுப்பினா்களை மட்டுமே கொண்ட அதிமுக 15 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 16 உறுப்பினா்களைக் கொண்ட திமுக தோல்வியைத் தழுவியுள்ளது. 1969 முதல் 53 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த மணப்பாறை நகராட்சியை தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது.