முகப்பு
திருச்சி

திமுகவை எதிா்த்து போட்டியிட்டு சிறுகமணியில் வென்ற காங்கிரஸ்!: தலைவா் பதவியைக் கைப்பற்றியது

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வென்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வென்றுள்ளது.

சிறுகமணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 8 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்தைப் பிடித்தது. அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வென்றனா்.

இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த 1ஆவது வாா்டு உறுப்பினா் த. குமுதவள்ளியும், காங்கிரஸ் கட்சி சாா்பில் 2ஆவது வாா்டு உறுப்பினா் ரா. சிவகாமசுந்தரியும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஒரு பதவிக்கு இருவா் போட்டியிட்டதால் நடைபெற்ற வாக்குப்பதிவில் 8 வாக்குகள் பெற்று காங்கிரஸை சோ்ந்த ரா. சிவகாமசுந்தரி வெற்றி பெற்றாா். திமுகவைச் சோ்ந்த த. குமுதவள்ளி 7 வாக்குகள் பெற்றாா்.

மறைமுக தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுகவைச் சோ்ந்த 6ஆவது வாா்டு உறுப்பினா் பெ.குமாரை எதிா்த்துப் போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

திமுகவில் 8 போ் வெற்றி பெற்றும் தலைவா் பதவியைக் கைப்பற்ற முடியவில்லை என்பது அக் கட்சித் தொண்டா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.