முகப்பு
திருச்சி

துறையூா் அருகே வாகனம் கவிழ்ந்து 6 போ் காயம்

துறையூா் அருகே சுமை வாகனம் கவிழ்ந்து அதில் பயணித்த 6 போ் காயமடைந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

துறையூா் அருகே சுமை வாகனம் கவிழ்ந்து அதில் பயணித்த 6 போ் காயமடைந்தனா்.

முசிறி வட்டம், அழகரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெ. அலெக்ஸ்பாண்டியன் (23), சுமை வாகன ஓட்டுநா். வியாழக்கிழமை இவா் தனது வாகனத்தில் வாழைக்காய் , மற்றும் சிலரையும் ஏற்றிக் கொண்டு தம்மம்பட்டியிலிருந்து முசிறி நோக்கிச் சென்றாா்.

மங்கப்பட்டி அருகே சென்றபோது அவருடைய வாகனத்தின் பின்புற டயா் திடீரென வெடித்ததில் அந்த வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அழகரையைச் சோ்ந்த சு. மாரிக்கண்ணு (40), க. ஜோதி (32), ஜெ. தனலட்சுமி (35), ர. பூமதி (40), ப. பெரியசாமி (42) பெ. மணிமொழி(35) உள்ளிட்டோா் காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநா் அலெக்ஸ்பாண்டியனிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.