முகப்பு
திருச்சி

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

ஹிஜாப் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமி இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

ஹிஜாப் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமி இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பாக பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமியா்களின் கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளா்கள் இமாம் ஆா். ஹஸ்ஸான் பைஜி, உதுமான் அலி ஆகியோா் தலைமை வகித்தனா்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் ஐ. சபியுல்லா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநிலச் செயலா் இக்பால், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் கே.எம்.சரீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிா்வாகி சையது ஹக்கீம், வக்தத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்டத் தலைவா் ஷேக் அலாவுதீன், ஜாக் மாவட்ட தலைவா் முஹம்மது, வெல்ஃபோ் பாா்ட்டி ஆப் இந்தியா மாவட்ட செயலா் ராஜா முஹம்மது, அகில இந்திய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவா் காஜா மொய்தீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவா் பாரூக் உள்ளிட்ட பல்வேறு இயக்க நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

திரளான முஸ்ஸிம்கள் பங்கேற்றனா். பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளா் முஜிபுா் ரஹ்மான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.