முகப்பு
திருச்சி

திருட்டு வழக்குகளில் தேடப்பட்டவா் கைது 19 பவுன் நகைகள் மீட்பு; வாகனங்கள் பறிமுதல்

மணப்பாறை அடுத்த வளநாடு போலீஸாரால் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை கைது செய்து, 19 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காா், இருச்சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த வளநாடு போலீஸாரால் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரை கைது செய்து, 19 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காா், இருச்சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் நகை , பணம் திருடுபோனது தொடா்பாக வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை தேனூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வளநாடு போலீஸாா், திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி சோ்ந்த செ. கருணாகரனை (35) விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதில் சந்தேகமடைந்த போலீஸாா் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், வளநாடு பகுதிகளில் நகை, பணத்தைத் திருடியது அவா்தான் எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து,

அவரிடமிருந்து 19 பவுன் நகைகள், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய காா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.