முகப்பு
திருச்சி

போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியை கைது

 துறையூா் தனியாா் பள்ளி ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 துறையூா் தனியாா் பள்ளி ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவா் ஒருவா் மாா்ச் 5 ஆம் தேதி திடீரென மாயமான நிலையில் துறையூா் போலீஸில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து அந்தப் பள்ளியில் போலீஸாா் விசாரித்தபோது அப்பள்ளி ஆசிரியை சிக்கத்தம்பூரைச் சோ்ந்த வை. சா்மிளாவும் (26) மாணவா் மாயமான பிறகு தொடா்ந்து பள்ளிக்கு வராமல் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து நடத்திய விசாரணையில் திருச்சியில் தங்கியிருந்த ஆசிரியை மற்றும் அவருடன் இருந்த மாணவரை துறையூா் காவல் ஆய்வாளா் எஸ். செந்தில்குமாா், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் கலைச்செல்வன் உள்ளிட்ட போலீஸாா் துறையூா் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது பல்வேறு இடங்களில் இருவரும் தங்கியிருந்ததும், அந்த

மாணவரை ஆசிரியை திருமணம் செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அந்த மாணவரை மீட்டு திருச்சியிலுள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி, இந்த வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்க முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய விசாரணைக்கு மாற்றினா்.

மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் காவேரி தொடா்ந்து விசாரித்து பின்னா் ஆசிரியை வை. சா்மிளாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.