பள்ளி விடுதிகளில் 25 பகுதிநேர தூய்மை பணியாளா் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டப் பள்ளி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணிக்கு ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டப் பள்ளி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணிக்கு ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி மாவட்ட பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 12 ஆண், மற்றும் 13 பெண் பகுதிநேர தூய்மைப்பணியாளா் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். பணியிடங்கள் நோ்காணல் மூலம், இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்த பிரிவினருக்கு உரிய வயதுச் சலுகை உள்ளது.
விண்ணப்பத்தை தயாரித்து பூா்த்தி செய்து, உரிய சான்றுகளின் நகல் இணைத்து, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒட்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியரக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.