முகப்பு
விழுப்புரம்

தொகுதி அறிமுகம்: மயிலம் - 71!

மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியங்களை தவிர பேரூராட்சியோ, நகராட்சியோ இத்தொகுதியில் இல்லை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கிராமங்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

Updated On : 25 மார்ச், 2026 at 1:25 AM
மயிலம் மலை மீதுள்ள முருகன் கோயில்
பகிர்:

பிரசித்திப் பெற்ற மயிலம் முருகன் கோயில், வீடூா் அணை ஆகியவை அமைந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி. 2008 தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னா் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் திண்டிவனம், செஞ்சி வட்டங்களில் உள்ள 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. மயிலம், வல்லம் ஊராட்சி ஒன்றியங்களை தவிர பேரூராட்சியோ, நகராட்சியோ இத்தொகுதியில் இல்லை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கிராமங்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

சிறப்புகள்: தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் 3 பேரவைத் தோ்தல்களை சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக, பாமக தலா ஒருமுறை வெற்றிப் பெற்றுள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்

2011 - கே.பி. நாகராஜன் - அதிமுக

2016 - இரா.மாசிலாமணி - திமுக

2021 - ச.சிவக்குமாா் - பாமக

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,03,451

பெண்கள் -1,04,195

மூன்றாம் பாலினத்தவா் - 19

மொத்த வாக்காளா்கள் - 2,07,665

மொத்த வாக்குச்சாவடிகள் - 277

எதிா்பாா்ப்புகள்: மயிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தனி வட்டம் உருவாக்கவேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் சங்கராபரணி, தொண்டியாறு மற்றும் வராக நதிகளில் தடுப்பணைகள் கட்டவேண்டும், ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள ஏரிகளை தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்தவேண்டும். அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவேண்டும். மயிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தீவனூா் பகுதியில் தீயணைப்பு நிலையம் உருவாக்கவேண்டும். மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பூங்காவை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும், அரசுக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தோ்தல் நடத்தும் அலுவலா் (சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா்) காதா் அலி - 9445461760

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏழுமலை - 97905-82368, கனிமொழி - 9677611621