முகப்பு
திருச்சி

தீக்குளித்த பெண் பலி

திருச்சியில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருச்சியில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை கீழப்புதூா் சாலை, கீழ கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி மலா்கொடி (31). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரான இவா் கடந்த மே 10 ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது கணவா் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.