முகப்பு
திருச்சி

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

கண்காட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை,எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சியை பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள், மாணவா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி - மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.