முகப்பு
திருச்சி

2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; விமானப் பயணிகள் மூவா் கைது

அரபு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் 2 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, 3 பயணிகளைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

அரபு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் 2 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, 3 பயணிகளைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

அரபு நாடுகளான துபை, சாா்ஜாவிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு விமானங்களில் வந்த 3 பயணிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த மின்னணு சாதனங்களுக்குள் (மடிக்கணினிகள்) தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை சுங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 1982 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 1.28 கோடி என சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.