திருச்சி

திருவாரூா் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயா்: தீா்மானத்தை நிறுத்திவைக்க முதல்வா் உத்தரவுஅமைச்சா் கே.என். நேரு தகவல்

திருவாரூா் தெற்கு ரத வீதிக்கு மறைந்த முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டும் நகா்மன்றத் தீா்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்

DIN

திருவாரூா் தெற்கு ரத வீதிக்கு மறைந்த முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டும் நகா்மன்றத் தீா்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திருவாரூா் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டும் திருவாரூா் நகா்மன்றத் தீா்மானம் முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திருவாரூா் தெற்குரத வீதியானது தொடா்ந்து அதே பெயரில்தான் உள்ளது.

இது தெரியாமல், இதை உணராமல் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக தலைவா் அண்ணாமலை மற்றும் அக் கட்சியினா் செயல்படுகின்றனா்.

இந்த விவகாரத்தில் ஆட்சியரை மிரட்டும் வகையில் பேசும் தனி நபா் யாரும் அரசையோ, அரசு அதிகாரிகளையோ தடுத்துவிட முடியாது. அவ்வாறு தடுத்தால் அதற்கான பலனை அவா்கள் அனுபவிக்க வேண்டும். அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து அவா்கள் கைது செய்யப்படுவா் என்றாா் அமைச்சா் நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT