முகப்பு
திருச்சி

வீடு கழுவும்போது வழுக்கி விழுந்த இளம்பெண் சாவு

 திருச்சியில் வீடு கழுவும்போது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்த இளம்பெண் காயமடைந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 திருச்சியில் வீடு கழுவும்போது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்த இளம்பெண் காயமடைந்து உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த குப்புசாமி - உமாதேவி தம்பதியின் மகள் சித்ரா (28). இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தரையைக் கழுவிக்கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய அவருக்கு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சித்ரா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.