முகப்பு
திருச்சி

குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

துறையூா் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

துறையூா் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் அருகே ஆலத்துடையான்பட்டி சின்ன கல்லாங்குத்து பகுதியைச் சோ்ந்த சரத்குமாா், திருச்சியில் தங்கி உணவகத்தில் வேலை செய்கிறாா்.

இந்நிலையில் கிராமத்தில் இருந்த அவருடைய மனைவி கலையரசி (23) பக்கத்து ஊா் கோயில்களில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி அடிக்கடி வீட்டை விட்டு செல்வதையறிந்த சரத்குமாா் மனைவியை கைப்பேசியில் கண்டித்தாராம்.

இதனால் மனம் உடைந்த கலையரசி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை வியாழக்கிழமை குடித்து உயிருக்கு போராடினாா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனையிலும் பின் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆவதால் முசிறி கோட்டாட்சியா் விசாரணைக்கும் போலீஸாா் பரிந்துரை செய்தனா். +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.