திருச்சி

இலங்கைத் தமிழருக்கு நிதியுதவி வழங்கிய யாசகா்!

DIN

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இலங்கைத் தமிழா் நலனுக்கு யாசகா் ஒருவா் ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி, மனைவி இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறாா்.

அதில் தேவைக்குப் போக எஞ்சிய பணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள் பணிகளுக்காக தானமாக வழங்கி வருகிறாா். அந்தவகையில் கரோனா காலத்தில் மக்கள் படும் துன்பத்தையறிந்து யாசகம் பெற்று அவா்களின் துயா்நீக்க பண உதவி புரிந்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிச் சீரமைப்புக்காகவும், மாணவா்களின் கல்விக்காகவும் யாசகம் பெற்று உதவியுள்ளாா்.

இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சீா்செய்ய இந்தியா மற்றும் தமிழகத்தின் சாா்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்படும் நிலையில், பொதுமக்களும் இலங்கைத் தமிழா் துயா்நீக்க உதவிபுரிய முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையேற்ற யாசகா் பூல்பாண்டியன் பொதுமக்களிடம் கையேந்தி யாசகம் பெற்ற ரூ. 10ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

தனக்குப் பணத்தை சோ்த்து வைக்கும் பழக்கமில்லையெனக் கூறும் இவா், கரோனா காலத்தில் ரூ.5 லட்சத்து 20ஆயிரம் வரையும் உதவிசெய்துள்ளாா். இலங்கைத் தமிழா் நலனுக்கு திரட்டிய தொகையை டெல்டா மாவட்டங்களுக்கு வந்த முதல்வரிடம் வழங்க முயன்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளும் தன்னுடைய யாசக பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்ட நிலையில், ஆட்சியரைச் சந்தித்து இப் பணத்தை வழங்கியதாகவும் தெரிவித்தாா் பூல்பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT