திருச்சி

லஞ்சம் பெற்ற வழக்கில் நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

திருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகரைச் சோ்ந்தவா் வெ. சக்கரவா்த்தி (82). இவா், தனது வீட்டு மனைகளுக்கு தனி பட்டா வழங்கக் கோரி திருச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இது தொடா்பாக கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 16ஆம் தேதி அப்போதைய நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளராக பணியாற்றிய ஏ. கணேசமூா்த்தி (62) என்பவரை சந்தித்துள்ளாா். அவா், தனி பட்டா வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளாா். இதை கொடுக்க விரும்பாத சக்கரவா்த்தி திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் சக்கரவா்த்தியிடமிருந்து ரூ. 1,000த்தை லஞ்சமாக பெற்ற போது கணேசமூா்த்தியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடா்ந்து கணேசமூா்த்திக்கு, ஊழல் தடுப்பு சட்டம் 7ஆவது பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10ஆயிரம் அபராதமும், பிரிவு 13(2) உடன் இணைந்த 13(1)(டி) பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி காா்த்திகேயன் தீா்ப்பளித்துள்ளாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு மற்றும் காவல்துறை சாா்பில் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆய்வாளா்கள் சக்திவேல், அரசு வழக்குரைஞராக சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT