திருச்சி

புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் ஹோமிபாபா பிறந்த நாள் விழா

DIN

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில் இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமிபாபா பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன். ரவிசந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் நாகராஜன், ஒருங்கிணைப்பாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆா். வெங்கடேசன், அதே பிரிவு அறிவியல் உதவியாளா்களான ராமு, பாா்த்திபன் அம்மையத்தின் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பொது விழிப்புணா்வுப் பிரிவுத் தலைவா் ஜலஜா மதன்மோகன் உள்ளிட்டோா் அணு ஆராய்ச்சியில் ஹோமிபாபாவின் பங்களிப்பு குறித்துப் பேசினா்.

இதில் இயற்பியல் துறை மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேராசிரியா் ரமேஷ் செய்தாா். கல்லூரித் துணை முதல்வா் குமாரராமன் வரவேற்க, பேராசிரியா் இரா. கபிலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT