திருச்சி

இந்திராகாந்தி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதுகலை மற்றும் வணிகவியல் ஆராய்ச்சித் துறையானது வணிகத்தில் திறன்கள் மற்றும் தேவைகள் என்ற தலைப்பில் நடத்திய நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் வித்யாலட்சுமி, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினாா்.

தஞ்சாவூா் பான் செகோா்ஸ் கல்லூரி வணிகவியல் துறை, உதவிப் பேராசிரியா் டி. ஹீனா கவுசா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். கல்லூரியின் வணிகவியல் பேராசிரியா் கஜலட்சுமி பேச்சாளரை அறிமுகப்படுத்தினாா்.

மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினா் உரிய பதிலளித்தாா். கல்லூரியின் வணிகவியல் துறை முதுநிலை இரண்டாமாண்டு மாணவி ஆா். பியூலாபெளஸ்டினா வரவேற்றாா். வணிகவியல் துறை முதுநிலை இரண்டாமாண்டு மாணவி டி. விஜயபாா்கவி நன்றி கூறினாா். வணிகவியல் துறை இளங்கலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT