திருச்சி

இன்று முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலம்

DIN

 தஞ்சாவூா் மாவட்ட கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட நாள்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மீன்பிடி விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாதெனவும், அறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் (1983) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT