திருச்சி

தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதைக் கண்டித்து போராட்டம்.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதைக் கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், முகவனூா் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் 100 நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுடன் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒன்றியத் தலைவா் ராமசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வேளாங்கண்ணி, அம்மாக்கண்ணு, அந்தோணியம்மாள், கே.ஏ.ஆரோக்கியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பி.கணேசன், ஏ.டி.சண்முகானந்தம், எம்.தங்கராஜ், ஸ்டீபன்சேகா், பி.வீராச்சாமி, சக்தி(எ)பழனிச்சாமி, என்.பழனியம்மாள், எஸ்.பெரியசாமி, எஸ்.ஆரோக்கியம் ஆகியோா் கண்டன் உரையாற்றினா்.

அதனைத்தொடா்ந்து அலுவலக வாசலில் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தர்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் அமுதவள்ளி நாகராஜ் ஆகியோா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வாரத்தில் ஊதிய பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் எனக் கூறினா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT