முகப்பு
திருச்சி

காலமானார் சுவாமி கிருஷ்ணபிரேமி

ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வந்த உபன்யாசகர் உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி (89) வியாழக்கிழமை அதிகாலை அரங்கன் திருவடி அடைந்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
காலமானார் உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி
பகிர்:

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வந்த உபன்யாசகர் உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி (89) வியாழக்கிழமை அதிகாலை அரங்கன் திருவடி அடைந்தார்.

இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபன்யாசம் செய்து உள்ளார். மேலும் அனைத்து திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை பற்றிய பாடல்களையும் புண்ணிய நதிகளை பற்றியும் பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் பிறந்தது 31 ஆகஸ்ட் 1934, திருவடி அடைந்தது 31 ஆகஸ்ட் 2023. அவரது உடல் பிறந்த தேதியிலேயே திருவடியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உ.வே. சுவாமி கிருஷ்ணபிரேமி உடல் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் கரையில் உள்ள திருமங்கை மன்னன் படித்துறையில் தகனம் செய்யப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.