சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
திருச்சி மாவட்டம் முசிறி அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
முசிறி அருகேயுள்ள சூரம்பட்டியைச் சோ்ந்த நல்லுசாமி மகன் காமராஜ் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு தும்பலம் சூரம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காமராஜ் உயிரிழந்தாா். புகாரின் பேரில், முசிறி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த காமராஜ் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.