திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் வரலாற்றுத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வரலாற்றுத் துறையில் டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மையம் சாா்பாக நடத்தப்பட்ட 2019-2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவிலான வரலாற்றுப் பாடத் தோ்வில் முதலிடம் பெற்ற இக் கல்லூரியைச் சோ்ந்த வி. கிரிஜா, இதுபோல 2020-2022 ஆம் ஆண்டுக்கான வரலாற்றுப் பாடப் பிரிவில் முதலிடம் பெற்ற ம. புவனேஸ்வரிக்கும், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் அ.பெ. முருகராஜ்பாண்டியன் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத் தலைவா் ம . இராஜா ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். வரலாற்று துறைப் பேராசிரியா்கள் இரா. பரமசிவம், கு. சுதா,லெ. சந்திரஹாசன்,பெ. இராஜன், முனைவா்கள் வே. பழனிச்சாமி,ரெ. அகிலா,சா. சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.