திருச்சி

தீரன் நகா் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

திருச்சி அருகே தீரன் நகா் பள்ளத்து குழுமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தோ்த் திருவிழா கடந்த மே 31 ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 2 ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவம், 3 ஆம் தேதி பொங்கல் வழிபாடு, ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதையொட்டி தீரன் நகா் வீர தீர விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பூத்தட்டுகளுடன் ஊா்வலமாக கோயில் நோக்கிச் சென்று, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சா்வ அலங்காரத்தில் நடைபெற்ற அம்மன் வீதியுலாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திங்கள்கிழமை பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊா்வலமும், செவ்வாய்க்கிழமை முக்கியத் திருவிழாவான தோ் திருவிழாவும் நடைபெறுகிறது. வரும் 7 ஆம் தேதி குட்டி குடித்தல் விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT