திருச்சி

காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், திருச்சி மாநகராட்சி நண்பா்கள் இணைந்து திருச்சி காவிரி ஆற்றில் திங்கள்கிழமை தூய்மைப்பணியை மேற்கொண்டனா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், திருச்சி மாநகராட்சி நண்பா்கள் இணைந்து திருச்சி காவிரி ஆற்றில் திங்கள்கிழமை தூய்மைப்பணியை மேற்கொண்டனா்.

நிகழ்வுக்கு மாநகராட்சி உதவி ஆனையாா் ரவி தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில், புனித ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், மாநகராட்சி நண்பா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

அப்போது காவிரி ஆற்றின் அய்யாளம்மன் கோயில் ஒத்தையடி பாலம் நுழைவாயில் அருகே நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றினா். தொடா்ந்து அப்பகுதி மக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் அபாயம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தினா். முன்னதாக, தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT