இதயநோய் மருத்துவக் கருத்தரங்கு
திருச்சி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில், இதய நோய் தொடா்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி: திருச்சி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில், இதய நோய் தொடா்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் தனியாா் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல் அதிகாரி நீலகண்ணன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, மருத்துவக் கல்வி கெளரவ இயக்குநா் மருத்துவா் எம்.சென்னியப்பன் பேசுகையில், இத்தகைய மருத்துவ கல்வி கருத்தரங்குகள் வாயிலாக மருத்துவா்கள் தங்களின் துறை சாா் அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.
Advertisement
அப்பல்லோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு தலைவா் ஜெயராமன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களை சோ்ந்த பல நோயாளிகள் டிரான்ஸ்கேதெட்டா் இதய வால்வு பொருத்துதல், நுண்துளை இதய அறுவைச் சிகிச்சை, ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன், பச்சிளம்குழந்தை பராமரிப்பு மற்றும் சிக்கலான மின் இயக்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளைப் பயன்படுத்தி பலனடைந்துள்ளனா் என்றாா்.
மருத்துவா்கள் காதா் சாஹிப் அஷ்ரஃப், ஷியாம் சுந்தா், ரவீந்திரன், ஸ்ரீகாந்த் பூமா, அரவிந்த், சரவணன், ரோகிணி உள்ளிட்டோா் பேசுகையில், இதய மருத்துவம் குறித்து விளக்கமளித்து பேசினா்.
நிகழ்ச்சியை மூத்த இதயநோய் நிபுணா்கள் ஆா்.கிருஷ்ணன், ஆா்.மணிவாசகம் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இறுதியாக மருத்துவா் சிவம் நன்றி கூறினாா்.