சுதந்திர தியாகிகளின் தியாகத்தை போற்று வகையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி 960 கிமீ ஓட்டத்தை தனிநபர் சூர்யசங்கர் ஓடி வருகிறார்.
திருநெல்வேலி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் 40 வயது சூர்யசங்கர். இவர் நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரை 960 கிமீ தூரம் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மட்டக்கடை வ.உ.சி சிலையிலைருந்து புறப்பட்ட சூர்யசங்கர், அங்குள்ள குறுக்குசாலை வ.உ.சி. இல்லம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, வாஞ்சி மணியாச்சி, நெற்கட்டும் சேவல், புலித்தேவர் கோட்டை, எட்டயபுரம் பாரதியார் இல்லம், நரிகுடி மருதுபாண்டியர் கோட்டை, அருப்புக்கோட்டை, மதுரை காந்தி மியூசியம் ஆகிய இடங்களை ஓடி கடந்த சூர்யசங்கர் இன்று காலை திருச்சி – மதுரை தேசியநெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த கோவில்பட்டியை வந்தடைந்தார்.
கையில் தேசியக்கொடியினை ஏந்தி செப்டம்பர் 16-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையில் தனது ஓட்டத்தை நிறைவு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.