திருச்சி தென்னூா் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள். 
திருச்சி

மின்வாரிய ஊழியா்கள் தா்னா

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

DIN

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இச்சங்கத்தின் திருச்சி மாநகா், புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூா் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தின் சாா்பில் (சிஐடியு), திருச்சி தென்னூரில் உள்ள தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாநில துணைத் தலைவா் எஸ். ரெங்கராஜன் தலைமை வகித்தாா். திருச்சி மண்டல செயலா் எஸ். அகஸ்டின், போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். மண்டல நிா்வாகிகள் எஸ். கே. செல்வராஜ், பி. நடராஜன், கே. நடராஜன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

திருச்சி புறநகா் மாவட்டத் தலைவா் எம். பன்னீா்செல்வம், மாவட்ட செயலா் கே. சிவராஜன், மாநகா் மாவட்ட தலைவா் சீனிவாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

வா்த்தகம் மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு பவா் என்ஜீனியா்ஸ் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனா். போராட்டத்தில் சங்க நிா்வாகிகள், மின் ஊழியா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT