திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைதோறும் குறைதீர் நாள் முகாம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் தங்களது, கோரிக்கைகளை ஆட்சியரிடம் நேரடியாக, மனுவாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு கொடுக்க ஒரு மூதாட்டி வந்திருந்தார்.
அவர் உடலில் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீஸார் மூதாட்டியை மீட்டனர்.
இது குறித்த தகவலறிந்த ஆட்சியர் மூதாட்டியிடம் விசாரித்த போது, அவர் பேட்டை வாய்த்தலை வஉசி நகரைச் சேர்ந்த ச.. முத்தாத்தாள் (70) என்பதும், அருகாமையில் வசிக்கும் நபர்கள் அவரிடம் ரூ.8 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், இதனால் விரக்தியில் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரைத்த ஆட்சியர், இதுபோன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என மூதாட்டிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.