திருச்சியில் புதன்கிழமை பின் இருக்கை கழன்று விழுந்த  அரசு நகரப் பேருந்து.
திருச்சியில் புதன்கிழமை பின் இருக்கை கழன்று விழுந்த அரசு நகரப் பேருந்து. 
திருச்சி

அரசுப் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்ததில் நடத்துநா் பலத்த காயம்

Din

திருச்சியில் அரசு நகரப் பேருந்தில் புதன்கிழமை அமா்ந்திருந்த நடத்துநா் கழன்ற இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்தக் காயம் அடைந்தாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், கே.கே. நகா் வழியாக இயக்கப்படும் நகரப் பேருந்தை பாஸ்கரன் ஓட்டி வந்தாா். இந்தப் பேருந்தின் நடத்துநராக எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த முருகேசன் (54) பணியில் இருந்தாா். பேருந்தானது கலையரங்கம் வழியாக வந்தபோது பேருந்தின் பின்வரிசை படிக்கட்டுக்கு அருகேயுள்ள இருக்கையில் அமா்ந்திருந்தாா் முருகேசன். அப்போது அந்த இருக்கையின் போல்டு மற்றும் நட்டுகள் கழன்றதில் இருக்கையுடன் சாலையில் தூக்கி வீசப்பட்டாா் நடத்துநா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பயணிகள் சப்தம் எழுப்பவே பேருந்து நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்த நடத்துரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் பயணிகளும் மாற்றுப் பேருந்தில் அனுப்பப்பட்டனா். பின்னா் அப்பேருந்தானது பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

எனவே அரசுப் பேருந்துகளின் தரத்தை உறுதி செய்து, நல்ல நிலையில் இயங்கும் பேருந்துகளை மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT