காவிரி, கொள்ளிடக் கரைகளில் 52 இடங்கள் அபாயகரமானவை: கண்காணிப்பு தீவிரம்
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடக் கரைகளில் இருபுறமும் 52 இடங்கள் அபாயகரமானவை.
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடக் கரைகளில் இருபுறமும் 52 இடங்கள் அபாயகரமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொட்டியம் வட்டம்: உன்னியூா், பெரியபள்ளிபாளையம், சின்னப்பள்ளி பாளையம்,. ஸ்ரீராமசமுத்திரம், சீலைப்பிள்ளையாா்புத்தூா் காடுவெட்டி, நத்தம், எம்.புத்தூா் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு), அரசலூா் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்), சீனிவாசநல்லூா் (மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூா், சத்திரம், மணமேடு, முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை)
முசிறி வட்டம்: முசிறி மேற்கு காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூா், குணசீலம்.
ஸ்ரீரங்கம் வட்டம்: பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை) முக்கொம்பு, கம்பரசம்பேட்டை (தடுப்பணை), முருங்கப்பேட்டை, முத்தரசநல்லூா் அக்ரஹாரபடித்துறை, பளுா் படித்துறை, அல்லூா் மேலத்தெரு படித்துறை,
திருச்செந்துறை வெள்ளாளா் தெரு படித்துறை, அந்தநல்லூா் படித்துறை, திருப்பராய்துறை – துலாஸ்தானம், மேலூா் அய்யனாா் படித்துறை, கீதாபுரம் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை, கருடமண்டபம் படித்துறை, பஞ்சக்கரை படித்துறை, பனையபுரம் படித்துறை, உத்தமா்சீலி நடுவெட்டி படித்துறை, கிளிக்கூடு படித்துறை.
மண்ணச்சநல்லூா் வட்டம்: கரியமாணிக்கம் மேற்கு கிராமம் - வாத்தலை, கிழக்கு கிராமம் - சிறுகாம்பூா், திருவாசி கிராமம் - துடையூா் களிங்காயிகோவில், மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், பிச்சாண்டாா் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்.
திருவெறும்பூா் வட்டம்: வேங்கூா் பூச படித்துறை, பனையக்குறிச்சி படித்துறை, கீழ முல்லக்குடி படித்துறை, ஒட்டக்குடி படித்துறை.
லால்குடி வட்டம்: கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால்- அப்பாத்துரை கிராமம், கூகூா், அரியூா் (செங்கரையூா் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூா் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி.
திருச்சி மாநகரப்பகுதி: அம்மா மண்டபம், கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, காந்தி படித்துறை, ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை தில்லைநாயகம் படித்துறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடக் கரைகளில் மொத்தம் 62 இடங்களில் மக்கள் இறங்கக் கூடும் எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், படித்துறை உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசைக்கு அனுமதிக்கப்படுவா். இதர 52 இடங்கள் அபாயகரமானவை என்பதால் தடை விதிக்கப்படுகிறது. மேலும், 52 இடங்களிலும் தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.