முகப்பு
திருச்சி

வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருச்சி அருகே கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:18 PM
பகிர்:

திருச்சி அருகே கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அரியாவூா் கீழ்க்காடு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் பிரித்தீஸ் (14). வண்ணாங்கோவிலில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவா் நண்பா்களுடன் சனிக்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்றாா்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் நவலூா் குட்டப்பட்டு அருகேயுள்ள அருவங்கால்பட்டி எனும் இடத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் குளித்தபோது ஆழமான பகுதிக்குள் மூழ்கினாா்.

இதுகுறித்து திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து உதவி மாவட்ட அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு ராம்ஜி நகா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.