முகப்பு
விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 8:13 PM
பலி
பகிர்:

விழுப்புரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா் திருக்கை குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் விஷ்ணு (15). இவா் கண்டமானடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9- ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.

பள்ளி விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த விஷ்ணு, தனது தம்பி ஆதேஷ் மற்றும் நண்பா்களுடன் வீட்டின் அருகேயுள்ள மலட்டாற்றுக்குச் சென்று குளித்துள்ளாா்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் விஷ்ணு ஆற்றில் மூழ்கினாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பணியிலிருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சிறுவன் விஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.