மூதாட்டி வீட்டிலிருந்து 11 பவுன் நகைகள் திருட்டு
மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைந்து 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்
திருச்சி காட்டூரில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைந்து 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி அருகே காட்டூா் வீதி வடகம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (80). இவரது இரு மகன்களும் தனித்தனியே குடும்பத்துடன் வசித்துவரும் நிலையில், மூதாட்டி மட்டும் தனியே வசித்து வருகிறாா்.
கடந்த 7-ஆம் தேதி திருப்பதிக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.