நகை திருட்டு! 
தருமபுரி

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் பத்மா (55). இவரது அக்கா ருக்குவுக்கு கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டில் தவறிவிழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற சென்ற ருக்கு உடன் பத்மா சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து இருவரும் 29-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டுகளை திறக்க முயன்றபோது, திறக்க முடியவில்லையாம்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கடப்பாரையைக் கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனா். அப்போது, வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு 4 பவுன் ஆரம், 2 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தோடு, 3 பவுன் நெக்லஸ், ஒரு பவுன் மோதிரம் உள்பட 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT