முகப்பு
திருச்சி

ஓடும் ரயிலில் ஏறமுயன்ற முதியவா் காயங்களுடன் மீட்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயில் படிக்கட்டு - தண்டவாளப் பகுதியில் சிக்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 9:18 PM
திருச்சி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயில் படிக்கட்டு - தண்டவாளப் பகுதியில் சிக்கிய பயணியை ரயில்வே பாதுகாப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னை செல்வதற்காக பல்லவன் விரைவு ரயில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது, அங்கு காத்திருந்த பயணிகள் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறத் தயாராகினா்.

அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான திருச்சி கருமண்டபத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (72) என்பவா் ஓடும் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்து, ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கினாா்.

அப்போது, ரயிலும் நின்றதால், அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். இதைப் பாா்த்த சக பயணிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் உடனடியாக ரயிலுக்கு அடியில் சிக்கிய ராஜேந்திரனை போராடி மீட்டனா். இதில் லேசான காயங்களுடன் ராஜேந்திரன் மீட்கப்பட்டு, ரயில் நிலையத்தில் தனியாா் மருத்துவ மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →