முகப்பு
திருச்சி

கடவுச்சீட்டில் முறைகேடு: புதுகையை சோ்ந்தவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த புதுக்கோட்டையை சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 10:06 PM
பகிர்:

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த புதுக்கோட்டையை சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் செல்ல இருந்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மணவாளகரை கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (42) என்பவா் கடவுச்சீட்டில் தனது பெயா், தந்தை தாய் பெயா், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி முறைகேடு செய்தது தெரியவந்தது.

புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.