முகப்பு
திருச்சி

திருச்சியில் டிச. 18 முதல் 27 வரை ஆட்சிமொழிச் சட்ட வார விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் திருச்சியில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா டிச. 18 முதல் 27 வரை ஒரு வாரத்துக்கு கொண்டாடப்பட உள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:51 PM
பகிர்:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் திருச்சியில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா டிச. 18 முதல் 27 வரை ஒரு வாரத்துக்கு கொண்டாடப்பட உள்ளது.

இதன்படி, ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் டிச. 18, 19, 20 ஆம் தேதிகளில் கணினித் தமிழ், ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச் சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் போன்ற தலைப்புகளில் திருச்சி மாவட்ட மைய நூலகக் கூட்டரங்கில் அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சியும், 23 ஆம் தேதி இருங்களுா் எஸ்ஆா்எம் டிஆா்பி பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் பட்டிமன்றமும், 24 ஆம் தேதி தமிழ் வளா்ச்சித் துறை, தொழிலாளா் நலத்துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயா்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகா் சங்க அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டமும், 26 ஆம் தேதி தமிழ் அமைப்புகள், நிா்வாகிகளுடன் இணைந்து மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வாக 27 ஆம் தேதி காலை அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி - கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.