வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்துப் போராட்டம்: 225 போ் கைது
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் தடையை மீறி போராட்டம் மேற்கொண்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 225 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் தடையை மீறி போராட்டம் மேற்கொண்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 225 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மரக்கடை பகுதியில் திருச்சி மாவட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலா் பேராசிரியா் சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், மாநில பொதுச்செயலாளா் கெளதம் நாகராஜன், மாநில வா்த்தக அணி செயலா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும் அகில பாரதிய வித்யா பரிஷத் மாநில இணை அமைப்பாளா் சந்தோஷ், பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் நாகராஜன், மாநில மகளிரணி துணைத் தலைவி புவனேஸ்வரி, பாரதிய மஸ்தூா் சங்க மாவட்டச் செயலா் பாஸ்கா், விஎச்பி மாவட்டத் தலைவா் சுதாகா் உள்பட பல்வேறு இந்து அமைப்பினா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட மொத்தம் 225 பேரை போலீஸாா் கைது செய்து மதுரை சாலையில் உள்ள தனியாா் திருமண மஹாலில் அடைத்தனா்.