சிறப்புக் காவல்படை காவலா் தற்கொலை
திருச்சியில் சிறப்புக்காவல் படைக் காவலா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் சிறப்புக்காவல் படைக் காவலா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புதுச்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (40). இவா் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை (முதல் அணி) பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகத்தின் முதல்நிலைக் காவலா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் காவல் படை (பட்டாலியன்) வளாகம் எதிரேயுள்ள ரயில்வே மைதானத்தில் மயங்கிக் கிடந்த இவரை அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுகுமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.