புயலின்போது சிறப்பாக பணியாற்றிய ரயில்வே ஊழியா்களுக்குப் பாராட்டு
ஃபென்ஜால் புயல் நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்களை திருச்சி கோட்ட ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தாா்.
ஃபென்ஜால் புயல் நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்களை திருச்சி கோட்ட ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தாா்.
புயல் வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய ரயில்வே துறையைச் சோ்ந்த தண்டவாளப் பராமரிப்பாளா்களான திருவண்ணாமலை ஆா். சுப்ரமணி, விருத்தாச்சலம் கே. சதீஷ்குமாா், எஸ். பிரபு, விழுப்புரம் தோட்டா ரமேஷ் குமாா், தெய்வானை, திருத்துறையூா் கே. குருமூா்த்தி, கேட் கீப்பா் வரகால்பட்டு இ. சீனுவாசன் ஆகியோரை திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் புதன்கிழமை நேரில் அழைத்து பரிசளித்துப் பாராட்டினாா்.
நிகழ்வில் முதுநிலைக் கோட்டப் பொறியாளா் நந்தலால் பெருமாள், கோட்ட பாதுகாப்பு அலுவலா் பி. தட்சிணாமூா்த்தி மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.