விளையாடியபோது மயங்கி விழுந்த சிறுமி உயிரிழப்பு
திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சோ்ந்தவா் தம்மிசெட்டிசிவா (24). இவா் குடும்பத்துடன் திருச்சி சஞ்சீவிநகா் பகுதியில் கடந்த 2 மாதமாக தங்கி துப்பாக்கித் தொழிற்சாலை கட்டளை வாய்க்கால் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் விளையாடி கொண்டிருந்த இவரது மகள் மாதுரி (4), திடீரென வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.