முகப்பு
திருச்சி

திருநெல்வேலியிருந்து கும்பமேளா சிறப்பு ரயில் ஜன. 16-இல் புறப்படுகிறது

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆா்சிடிசி) சாா்பில், கும்பமேளா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:54 PM
பகிர்:

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆா்சிடிசி) சாா்பில், கும்பமேளா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஐஆா்சிடிசி தென் மண்டல பொது மேலாளா் பி. ராஜலிங்கம் பாசு, செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் மகா கும்பமேளா சிறப்பு ரயில் எனும் பாரத கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜன. 16-ஆம் தேதி புறப்படுகிறது.

ஜன. 24-ம் தேதி மீண்டும் திரும்பும் வகையில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், விஜயவாடா வழியாக ரயாக்ராஜ், வாராணசி, அயோத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளது.

சாதாரணப் பிரிவு பயணத்துக்கு ரூ.28 ஆயிரத்து100, கம்போா்ட் (3 ஏசி) வகை பயணத்துக்கு ரூ. 44ஆயிரத்து 850 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தூங்கும் வசதி, உள்ளூா் இடங்களை பாா்வையிடுவதற்கான போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளா் மறறும் தனியாா் பாதுகாவலா் வசதி, தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் அனைத்தும் பயணத்தில் வழங்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன பெட்டி உள்பட மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. இந்த சுற்றுலா பயணத்தில் 500 போ் மட்டுமே அழைத்து செல்லப்படுவா் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயணிகளுக்கான காப்பீடு மற்றும் எல்டிசி சான்றிதழ் வழங்கப்படும். குளிா்காலத்துக்கு ஏற்ற உடைகளை பயணிகள் கொண்டு வர வேண்டும். சுற்றுலா பயணத்துக்கு முன்பதிவு செய்து கொள்வதற்கு திருச்சியில் 82879-32070, மதுரையில் 82879-31977, 82879-32122 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →