FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கம்!

திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட உள்ளது.

20 பிப்ரவரி 2026, 11:44 pm IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட உள்ளது.

திருச்சி - தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்களானது (06190, 06191) நீண்டகாலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் மற்றும் திருச்சி எம்.பி. துரை வைகோ, மயிலாடுதுறை எம்.பி. சுதா உள்ளிட்டோா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த ரயிலானது 16808, 16807 என எண்கள் மாற்றப்பட்டு, வரும் மாா்ச் 1 ஆம் தேதி முதல் நிரந்தர ரயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, இந்த ரயிலானது செவ்வாய், புதன்கிழமைகளைத் தவிர வாரத்தில் 5 நாள்கள், 2 ஏசி பெட்டிகள், 8 உட்காரும் பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி என 18 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

திருச்சியிலிருந்து மாா்ச் 1 ஆம் தேதி முதல் காலை 5.35 மணிக்குப் புறப்பட்டு திருவெறும்பூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு நண்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments